பூனைக்கு யார் மணி கட்டுவது “ என்ற சந்தேகம் இருந்தது ஜனாதிபதி அவர்கள் தனது இன்றைய பாராளுமன்ற உரையின் போது அவரே அந்த செயலை செய்து விட்டார்.
அதே போன்று தேர்தலை பின் போடும் சதித்திட்டத்தில் யார் பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள் என்ற சந்தேகமும் இருந்து வந்தது தற்போது அந்த ‘கருப்பு ஆடும் வெளிவந்து விட்டது.”
நாட்டில் பொருளாதார பிரச்சனை தலை தூக்கி உக்கிரமடைந்து உள்ள நிலையில், ஜனநாயகமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பொருளாதாரம் மேம்ப்பட வேண்டுமாயின் முதலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்
“நிலையான அரசாங்கம் இல்லாமல் ஸ்திரமான பொருளாதார நிலையை அடைய முடியாது” “Without Political stability there can be no Economic prosperity “ ஆகவே, இந்த இலக்கை அடைவதற்கு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்குஉரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் ஆணையை பெற்று, சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற வேண்டும்.
ஆனால், நமது நாட்டில் நிலைமை தலைக்கீழாக இருக்கிறது. சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்த போதிலும் அரசாங்கம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவுல்லை மாறாக முட்டுக்கட்டை போட்டது.
அதனால், “பூனைக்கு யார் மணி கட்டுவது “ என்ற சந்தேகம் இருந்தது ஜனாதிபதி அவர்கள் தனது இன்றைய பாராளுமன்ற உரையின் போது அவரே அந்த செயலை செய்து விட்டார். அதே போன்று தேர்தலை பின் போடும் சதித்திட்டத்தில் யார் பின்னணியிலிருந்து செயல்படுகிறார்கள் என்ற சந்தேகமும் இருந்து வந்தது தற்போது அந்த ‘கருப்பு ஆடும் வெளிவந்து விட்டது.”
“தேர்தல் மற்றும் வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் இரண்டு முக்கியமான தூண்களாகும். “ இந்த முக்கியமான இரண்டு தூண்களை பாதுகாக்க தவறும் பட்சத்தில் நாடு சர்வதேச அளவில் ஆட்டம் காண்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கம் - உள்நாட்டில் போடும் குள்ளநரித்தனமான - அடக்குமுறை நாடகங்களை சர்வதேசத்திலும் - ஆட நினைத்தால் - இலங்கை சர்வதேசத்தில் இருந்து மேலும் தனித்து விடப்படும் நாடாக மாறிவிடும்.
ஜனநாயகத்தை மதிக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மாத்திரம் அல்ல வேறு எந்த சர்வதேச நாடுகளின் மற்றும் நிறுவனங்களின் உதவிகள், கடன்கள் அல்லது நிவாரணமோ பெற முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்படும்.
ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும். தற்போதய அரசாங்கம் ஆட்சி செய்வதற்கான எல்லா விதமான தகுதியையும் இழந்துவிட்டது நாட்டு மக்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், எமது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலையோ படு திண்டாட்டம்தான்.
இரண்டு தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் தேயிலை சபை திருத்த சட்டம் முன்வைக்கப்பட்டது. அதில் தேயிலை சபை - தேயிலை ஆய்வுக்கூடம் என தரம் உயர்ந்நப்பட்டது
ஆனால், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை தரம் உயர்த்தி இருக்கிறிர்களா? அவர்களின் வருமானத்தை, சம்பளத்தை உயர்த்தி இருக்கிறிர்களா? இல்லையே அவர்களின் உழைப்பு வேண்டும் ஆனால், அவர்களின் உயர்வில் அக்கறை இல்லை.
ஆகவே, தற்போது நாட்டில் இருப்பது மக்களின் ஆதரவை இழந்த அரசு - நாட்டு மக்களைஆள தகுதியற்ற, மக்கள் ஆணையற்ற அரசாங்கம். நாட்டில் தற்போது இருப்பது மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி - மக்கள்ஆணையற்ற ஜனாதிபதி.
அதேபோல. தற்போது நடைமுறையில் இருப்பது ஆயுட்காலம் முடிவடைந்த - மக்கள் ஆணை நிறைவடைந்த உள்ளூராட்சி சபைகள். ஏற்கனவே ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்ந்துஇயங்க முடியாது.
அதனால், தேர்தலை நடத்தாமல் இதனையும் செயலிழக்க அரசாங்கம் முயற்ச்சிக்கிறது.
வேட்பு மனுகளை பெற்றுவிட்டு - தேர்தல் திகதியை அறிவித்துவிட்டு தற்போது உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தாமல் பிற்போட்டு கபட நடாகமாடுகிறது.
உண்மையிலே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் பணமில்லை என்பதல்ல - தேர்தலை எதிர்க்கொள்ள அரசாங்கத்திற்கு துணிவில்லை. அதாவது, பணப்பற்றாக்குறை என்பதை விட - உண்மையில் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. அதற்கு காரணம் - தோல்வி பயம்.
தோல்வி பயத்தில் இருக்கும் அரசாங்கத்தால் - உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் அல்ல - எந்த ஒரு தேர்தலையும் நடத்த முடியாது. தேர்தலுக்கு பணம் தான் பிரச்சினை என்றால் அதனை திரட்ட நிறையவே வழி இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி சர்வதேசத்தில் பலம் வாய்ந்த தலைவர் என்று பீத்திக்கொள்கிறார்கள்! அவரால் தேர்தலுக்கு பணம் திரட்டிக் கொடுக்க முடியாதா?
இந்த ஜனாதிபதிக்கு மட்டும்தான் அறிவு இருப்பது போல விளம்பரம் செய்கிறார்கள் ! அப்படியானால் அந்த அறிவை பயன்படுத்தி தேர்தலுக்கு பணத்தை திரட்டிக் கொடுக்கமுடியாதா?
பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அளவற்ற கொடுப்பனவுகள், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் என பல்வேறு வீண் விரயச் செலவுகளை நிறுத்தி அந்த பணத்தை சேமித்தால் ஒரு தேர்தல் அல்ல பல தேர்தல்கள் நடத்த முடியும்.
குறிப்பாக முன்னால் ஜனாதிபதிகள் தான் நாட்டின் தறபோதய நிலைமைக்கு காரணம் அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு அளவற்றவரப்பிரசாரங்களை வழங்குவது தவறான முன்னுதாரணமாகும்
ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் சுதந்திர தின நிகழ்வுகளுக்கும் பாரிய செலவுகளை மேற்கொள்ள முடியும் என்றால் அந்த சுதந்திரத்தின் மூலம் பெறப்பட்ட ஜனநாயகத்தை உறுதிப்படுத்த ஏன்? செலவு செய்ய முடியாது. நாட்டின் 75 வது சுதந்திரதின வருடத்தில் இவ்வாறு ஜனநாயக படுகொலை நடைப்பெறுவது வெட்ககேடானது.
‘அதாவது ஆடம்பரத்துக்கும் அடக்குமுறைக்கு பணம் செலவிடும் திறைசேறியால் - ஜனநாயகத்தை பாதுகாக்க ஏன் பணம் செலவிட முடியாது.’
ஏற்கனவே, மாகாணசபைகள் சுமார் 5 வருடங்களுக்கு மேல் இயங்காமல் படுகுழியில் போடப்பட்டுள்ளது
மாகாண சபையை மூடி வைத்துவிட்டு - 13 வது திருத்தச் சட்டம் பற்றி பேசும்கள்ளத்தனமான அரசாங்கம் இது.
13 வது திருத்த சட்டத்தின் மிகப்பெரிய அங்கமாக இருக்கிற - மாகாண சபைகளைசெயலிழக்க செய்து விட்டு - 13 வது திருத்த சட்டத்தை முமுமையாக அமுல்ப்படுத்துவேன் என்பது ஜனாதிபதி சர்வதேசத்திற்கு போடும் போய் வேஷமாகும். அத்துடன், மாகாண சபைகளை முடக்கியது போல உள்ளூராட்சி சபைகளையும் முடக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருகிறது. ஆனால், தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தலை தான் தோன்றித்தனமாக பிற்போடக் கூடாது.
ஆகவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டு நாட்டு மக்களின் வாக்குரிமையும் - நாட்டின் ஜனநாயகமும் பாதுகாக்கப்படும்வரை நாம் உறுதியாக எமது போராட்டங்களை முன்னெடுப்போம்.