Our Feeds


Monday, February 6, 2023

Anonymous

தேர்தலை நடத்த MP க்களின் 2 மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் - ராதா யோசனை.

 



உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு இல்லை என்றால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என இராதா கிருஷ்ணன் கூறுகிறார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை தாமதப்படுத்தி தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

“தேர்தல் அலுவலகம் தயாராகவுள்ளது. இன்று வரை திறைசேரியில் இருந்து பணம் வழங்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், பொலிஸ் எஸ்டிமேட் அனுப்பி, அதிகம் என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்கள், எதிலும் குறையினை தேடுகிறார்கள்.. இந்த முரண்பாட்டைக் காட்டி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கிறார்கள்.. இந்த நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என நான் கூறுகிறேன்.. அதற்கு தேர்தல் நடக்க வேண்டும். அந்த வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 225 பேரினதும் இரண்டு மாத சம்பளத்தினை நிறுத்திட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நான் எனது சம்பளத்தை வழங்க தயாராகவுள்ளேன்… மற்றவர்கள் எப்படி இருக்காங்கன்னு தெரியலையே.”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »