Our Feeds


Monday, February 13, 2023

ShortNews Admin

LTTE தலைவர் "பிரபாகரன் உயிருடன் இல்லை" - இலங்கை ராணுவம் அறிவிப்பு.



பிரபாகரன் உயிருடன் இருப்பது குறத்த செய்திகளை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அது தொடர்பான ஆதாரங்கள் தம்மிடமிருப்பதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. 


இன்று தமிழகத்தில் பழ. நெடுமாறன் நடத்திய ஊடக சந்திப்பில் பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் பி.பி.சி தமிழ் இணையதளம் கேட்டபோது, "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக் கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக" தெரிவித்தார்.


மேலும், "2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். டி.என்.ஏ ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்.


குறித்த தேதியில் பிரபாகரனை கொல்லப்பட்டமைக்கான டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்களை வெளியிடுகின்றார்கள்.


இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை," என்று பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »