இத்தாலி – கலாபிரியா கடற்பகுதியில் அகதிகள் படகொன்று கவிழ்ந்ததில் 59திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு 100ற்கும் மேற்பட்ட ஆபிரிக்க அகதிகளுடன் சென்ற படகு ஒன்றே கடலில் மூழ்கியது.
விபத்தில் உயிரிழந்த 59 பேரின் சடலங்களை மீட்டுள்ள இத்தாலி கடலோர மீட்புப் படையினர், சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.