உள்ளாட்சிசபைத் தேர்தலில் மொட்டு கட்சியை
(ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) விடவும் ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஒரு வாக்கையாவது அதிகம் எடுத்தால் கோவணத்துடன் ஒடுவதற்கு நான் தயார்.”இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
காலி முகத்திடல் போராட்டக்களம் முதல் ஜனாதிபதி செயலகம்வரை இவ்வாறு ஓடுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறினார்.
சமூக ஊடகமொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நேர்காணலொன்றை வழங்கினார்.
இதில் உள்ளாட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளை பெறும் என நேர்கண்டவர் குறிப்பிட்டார்.
இதனை சனத் நிஷாந்த மறுத்தார்.
அவ்வேளையில் சனத் நிஷாந்தவுக்கு சவாலொன்று விடுக்கப்பட்டது.
அதாவது மொட்டு கட்சியை விடவும் ஜே.வி.பி. ஒரு வாக்கையாவது அதிகம் பெற்றால் கோவணத்துடன் ஓட வேண்டும் என நேர்கண்டவர் குறிப்பிட்டார்.
அதனை சனத் நிஷாந்த ஏற்றார். சிலவேளை ஜே.வி.பி. குறைந்த வாக்குகளைப் பெற்றால் நீங்கள் ஓட வேண்டும் என நேர்கண்டவருக்கு சனத் நிஷாந்த சவால் விடுத்தார்.