தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் திருமதி சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் திருமதி சார்ள்ஸுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.