பார்ல் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டைரன் 40 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் ஈடன் கார்சன், த{ஹுஹ ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில், நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ரன்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில அபாரமாக வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய அயர்லாந்து 18.2 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வென்றது.