கேப் டவுன் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, பங்காளதேஷ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பங்காளதேஷ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பங்காளதேஷ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் ரணசிங்கே 3 விக்கெட்டும், அடப்பட்டு 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணி 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீராங்கனை ஹர்ஷிதா மதாவியுடன் நீலாக்ஷி டி சில்வா ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில், இலங்கை 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஹர்ஷிதா மதாவி அரை சதமடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நீலாக்ஷி டி சில்வா 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.