Our Feeds


Friday, February 10, 2023

SHAHNI RAMEES

#ICCWomensWorldCup: இலங்கை, தென்னாபிரிக்கா இன்று மோதல்...!

 

8-வது மகளீர் டி20 உலக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.



கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலகக் கிண்ண உதைபந்து போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த போட்டி இப்போது நடக்கிறது.



மொத்தம் 23 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.



'ஏ' பிரிவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கத்திய தீவுகள், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.



ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இன்று நடைபெறும் தொடக்க லீக் போட்டியில் சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது. இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.



இந்திய அணி தனது முதலாவது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை நாளைமறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறது.



சமீபத்தில் முதலாவது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் அணி மகுடம் சூடி வரலாறு படைத்தது. அதேபோன்று சீனியர் போட்டியிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. அதே நேரத்தில் 5 முறை சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.



இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.8¼ கோடியும்(இந்திய ரூபா) , 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.4¼ கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »