முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று 3 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
கடந்த போராட்ட காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து, போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் பணம் தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்குச் சென்று அங்கு விசாரணைகளை நடத்தியது.