இதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்து எந்த தகவலும் இது வரையில் வெளியாகிவில்லை என்று அறியப்படுகின்றது.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
150-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காவலர் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியில் ஒரு பகுதியில் மசூதியில் குண்டு வெடிப்பு நடந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் என்பது குறிப்பிடத்தக்கது.