யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
யாழ் நகரில் யாழ் கலாசார நிலையத்தை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.