அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி
பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்ற இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.அந்த விமானம் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
குறித்த விமானத்தில் மொத்தமாக 5 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் புறப்பட்டு சில மைல்கள் தொலைவுக்கு சென்றதும் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த விபத்து நடந்த இடத்திற்கு லிட்டில் ராக் பகுதியின் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ இடத்தில் உடனடியாக சென்றுள்ளனர்.
விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, விபத்து குறித்த விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.