வெல்லவாய பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் 2.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, நேற்று புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.