திஸ்ஸமஹாராம-வெல்லவாய வீதியில் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (06) இரவு திஸ்ஸமஹாராமவில் இருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த அவர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெவுரம்வெஹெர தனமல்வில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் வாகனத்தை செலுத்தியது தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.