2023 கொரிய மொழி பரீட்சைக்காக இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரையில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மற்றும் பரீட்சை அனுமதி சீட்டுக்களை பெறுதல் உள்ளிட்ட தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.