நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் ஆனால் அதற்காக 2.5 பில்லியன் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.