கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் “குடு சுமங்கலி” என்ற பெண் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 200 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.