ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தாலும் பலவந்தத்தாலும் மேற்கொள்ளப்படும் தற்போதைய அதிகாரப் பரவலாக்கல் முறையை இல்லாதொழிப்பதற்கு தமது கட்சி முன்னுதாரணமாகி அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்தார்.