முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுப்பதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.