பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மறுசீராய்வு மனுவொன்றை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புப் பணியகத்தின் சார்பில் சட்டமா அதிபர் இந்த மீளாய்வு மனுவை முன்வைத்துள்ளதுடன், பிரதிவாதியாக வசந்த முதலிகே பெயரிடப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.