ராகம போதனா வைத்தியசாலையில் ஜெனரேட்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்வெட்டு ஏற்பட்ட நேரத்தில் வைத்தியர்கள் உட்பட முழு ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் நேற்று இரவு மிகவும் அசௌகரியமடைந்தனர்.
இரவு 9.30 மணியளவில் மருத்துவர்கள் கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்ததாகவும், சுமார் ஒரு மணித்தியாலத்தில் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.