முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எம்.பியினால் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நட்டஈடு வழக்கு மேலதிக மாவட்ட நீதிபதி நுவன் தாரக ஹினடிகல முன்னிலையில் நேற்று (பெ்ப 08) சமரசம் செய்யப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆயிரம் மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி நிமல் லான்சாவினால் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி நீர்கொழும்பு, லைடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து காரணமாக தமக்கு ஏற்பட்ட நற்பெயருக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி நிமல்லான்ஸா இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று புதன்கிழமை மேலதிக நீதவான் முன்னிலையில் தீர்வுக்காக அழைக்கப்பட்ட போது, ரஞ்சன் ராமநாயக்கவின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவரின் வார்த்தைகளில் முறைப்பாட்டாளரின் பெயர் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, பிரதிவாதி முறைப்பாட்டாளரை மனதளவில் காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு தெரிவித்தார்.
முறைப்பாட்டாளரின் சார்பில் சட்டத்தரணி
கங்கா லிவேராவின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணிகளான ஜும்னி லிவேரா, திலிப படகொட, சுபாஷ் குணதிலக்க, ஹிலாரி லிவேரா, ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி சௌமியா அமரசேகர ஆகியோர் ஆஜரானார்கள்.
பிரதிவாதியின் சார்பில் சட்டத்தரணி
வருண நாணயக்கார மன்றில் ஆஜர் ஆனார்.