பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி ஹர் இன்று (03) இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் ஒப்சர்வர் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் கூறுகையில், இலங்கையின் 75 வது சுதந்திர தின விழாவில் கெளரவ விருந்தினராக அமைச்சர் பங்கேற்பார்.
சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், ஹினா ரப்பானி ஹர் இலங்கைத் தலைமைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் மும்தாஸ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களிலும் சீராக வளர்ந்து வரும் வரலாற்று உறவுகளை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சரின் விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு பாகிஸ்தானின் ஆதரவை வெளிப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.