பெலவத்தையில் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினரின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தம்பதியினர் நாட்டைவிட்டு தப்பிச்செல்லவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.