நோயாளர்களின் சிகிச்சைக்காக 140 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தப்பட வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தேசிய வைத்தியசாலை முதல் கிராமிய வைத்தியசாலைகள் வரையிலான முழு வைத்தியசாலையின் சுகாதார சேவைகளை பேணுவது பாரிய சவாலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இந்திய கடன் உதவி முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்படும் 80% மருந்துகள் பதிவு செய்யப்படவில்லை என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.