பொரளை, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 25 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய இராணுவத்தினர் முற்பட்டதாகவும், இதன் போது அதிகாரி ஒருவரின் ஆயுதம் தற்செயலாக வெளியேறி பெண் ஒருவரை காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் இரு இராணுவ வீரர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.