லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனத் தகவல்கள் முன்னதாக தெரிவித்தன.
இதன்படி 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.