இன்று (13) காலை மின்னேரிய பஸ் நிலையத்தில் இருந்து ஹிங்குரக்கொட நோக்கி புறப்பட்ட பஸ் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பஸ் திடீரென வீதியை விட்டு விலகி கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
விபத்து நடந்த உடனேயே, டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.
75 வயதான என்.கே. ஆரியரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.