இறக்வானையில் உள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொடக்கவெல பிரதேச செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சிறுவர் இல்லத்தின் கண்காணிப்பாளரின் கணவரான சந்தேகநபரை இரத்தினபுரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது.
11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.
கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகக் கூறப்படும் சிறுமியொருவர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்ததாகவும், 18 வயது நிறைவடைந்ததையடுத்து அவர் சிறுவர் இல்ல பொறுப்பாளரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
53 வயதுடைய சந்தேக நபர் றக்குவானை எரிபொருள் நிலையத்தில் பணியாற்றியபடி இந்த துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சமத் சுரவீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.