மட்டக்களப்பு நீதி மன்றத்திலிருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன்; நேற்று ஒருரை கைது செய்த பொலிசார் அவரை இன்று பகல் 12 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று நீதவான் அறையில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த கைதியின் விலங்கை பொலிசார் கழற்றிய போது குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து தப்பி ஓடிய நபரை தேடிவருவதுடன் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.