பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தலைமையில் செயற்படுகின்ற ஜக்கிய தொழிலாளர் முன்னணி பதுளை மாவட்டத்தில் ஒரு சில பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தின கீழ் இயங்குகின்ற மலையக தொழிலாளர் முன்னணியின் சந்தா பணத்தை அவர்களுடைய தொழிற்சங்க காரியாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் மூலமாக அறிவித்திருப்பதானது தவறான நிதி மோசடி என்பதை மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாக சபை கூட்டம் இன்று (05.01.2023) தலவாக்கலை விருந்தகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எங்களுடைய கட்சியின் உறுப்பினராக இருந்த அ.அரவிந்தகுமார் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து அமைச்சராக செயற்படுகின்ற நிலையில் அவர் தற்பொழுது மலையக தொழிலாளர் முன்னணி அங்கத்தவர்களின் சந்தா பணத்தை அரவிந்தகுமார் தலைமைத்துவம் வகிக்கின்ற ஜக்கிய தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பினுடைய காரியாலயத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவருடைய தொழிற்சங்கத்தின் தொழில் உறவு அதிகாரி ஊடாக கடிதம் மூலமாக அறிவித்திருக்கின்றமையானது முற்றிலும் தவறானதும் நிதி மோசடியில் ஈடுபடுகின்ற ஒரு செயலாகவே இந்த செயற்பாட்டை மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.