மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமனரதன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரரை இலக்கு வைத்து இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் சுமனரதன தேரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வேளையில் அவர் அறைக்குள் இருந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.