துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகளில் இலங்கை பெண் தங்கியிருந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நிலஅதிர்வுகளால் சந்திரிக்கா ராஜபக்ஷ என்ற பெண் தங்கியிருந்த இடம் நில அதிர்வால் சேதமடைந்துள்ளதுடன் அவர் இதுவரையில் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அந்த இடத்துக்கு அவரது மகளும் சென்றுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.