எரிபொருள் தேவை மற்றும் விநியோகத்தை நிர்வகித்து எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தாம் முன்வைத்த தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை அமைச்சர் பெசில் ராஜபக்ஷ எதிர்த்ததாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஆனால் இறுதியில் தான் முன்வைத்த தீர்வுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்ததாக மேலும் குறிப்பிட்டார்.
அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.