(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த மூன்று வருடகாலமாக பதவியில் இருந்த சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையிலான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் வக்பு சபைக்கு புதிய நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
வக்பு சபை வரலாற்றில் கடந்த மூன்று வருட காலத்தில் 1 ½ வருடகாலம் கொவிட்நோய் பரவல் காரணமாக சபை அமர்வுகளை தொடர்ச்சியாக நடத்த முடியாத நிலைமை உருவாகியிருந்தாலும் இச்சபை 87 அமர்வுகளை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது காலத்தில் வக்பு சபை பல முன்னேற்றகரமான திட்டங்களை வடிவமைத்திருந்தன. என்றாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு இன்மை காரணமாக அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமற்போனது. இவற்றை தற்போது பதவியேற்றுள்ள திணைக்களத்தின் பணிப்பாளர் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும், ஒத்துழைப்பு வழங்கியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வக்பு சபையின் முன்னாள் தலைவர் கூறினார்.
– Vidivelli