(செ.தி.பெருமாள்)
இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பு மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டி இடும் நவ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் உடன் எவ்வித தடையும் இன்றி தேர்தலை குறிப்பிட்ட தினங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து அமைதி போராட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்வு நவ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டி இடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் முன் வைத்த கோரிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைக்க பட வேண்டும்.நாட்டில் ஏற்பட்டு உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைத்து பொருட்களும் பன் மடங்கு அதிகரித்துள்ளது இதனால் நாள் ஒன்றுக்கு 3500/= ரூபாய் தேவைப்படும் நிலையில் உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது அதுவும் பல தோட்டத்தில் அரை நாள் வேதனம் வழங்க பட்டு வருவதாக தெரிகிறது.
பல பகுதிகளில் பட்டினி இறப்பு அதிகரித்துள்ளது.இவ்வாறு நாடு செல்லும் வேளையில் நாட்டின் தலைவர் உடன் கவணம் செலுத்தி இலங்கை வாழ் மக்கள் நலன் கருதி மின் கட்டணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் உணவு பொருட்கள் விலை குறைப்பு செய்வதுடன் குறித்த திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.