"தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது. ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்யுங்கள். வேறு மாற்று வழியில்லை என மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை தான் நான் புரிந்துக்கொண்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தமிழன் செய்திகளுக்கு தெரிவித்தார்.