ரதல்ல பேருந்து விபத்து தொடர்பான விசாரணைக்குப் பிறகு, பேருந்துகளின் பார்வையைத் தடுக்கும் வகையில் சிலைகள், மாலைகள், உருவங்கள், மின்விளக்குகள், தொங்கும் ஆடும் பொருட்களை பேரூந்துகளில் பொருத்த தடை விதிக்க மோட்டார் போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்துள்ளது.
சாரதியின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேருந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்படுவதை தடை செய்யவும் குறித்த துறை பரிந்துரை செய்துள்ளது.