நாடளாவிய ரீதியில் ரேபிஸ் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த வாரத்திற்குள் 20 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டால் தடுப்பூசிகளின் இருப்பு அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை போதுமானதாக இருக்கும் என சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சேவைகள் பணிப்பாளர் எல்.டி. கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.