சர்வதேச அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கையின் மேற்கு துறைமுக முனையத்தின் 51 சதவீத பங்குகளை கொண்டுள்ள கௌதம் அதானி, அவரது அதானி குழுமம் நிறுவனத்தின் ஊடாக 286 மற்றும் 234 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க சக்திவள மின்னுற்பத்தி நிலையங்களை வடக்கு இலங்கையில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளார்.
இந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அடுத்தக்கட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக கௌதம் அதானியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் இலங்கை வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.