துருக்கியின் பூகம்ப இடிபாடுகளிற்குள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர் ஒருவரும் சிக்குண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்சியா நியுகாஸ்டில் ஆகியவற்றின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சுவிற்காக பிரார்த்தனை செய்யுமாறு கானாவின் கால்பந்தாட்ட சம்மேளனம் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அவர் துருக்கியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார் என கானாவின் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
31வயதான அட்சும் ஹட்டாய் ஸ்போரின் அதிகாரியொருவரும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான கட்டாயின் விளையாட்டுக்கழகமே கட்டாய்ஸ்போர்.
அட்சுவிற்காகவும் பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்களிற்காகவும் தொடர்ந்தும் பிரார்த்திப்பதாக கானாவிளையாட்டுக்கழகம் தெரிவித்துள்ளது.