காலி முகத்திடலில் சுதந்திரதின கொண்டாட்டத்தை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் அமைதியற்ற வகையில் செயற்பட்ட பெண் ஒருவர் அடங்கலாக இரண்டு பேர் கைதாகினர்.
நேற்றிரவு அந்த பகுதியில் புகைப்படம் எடுக்க குறித்த இருவரும் முற்பட்டுள்ளனர்.
இதன்போது, அங்கிருந்தவர்கள் அதற்கு தடை விதித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இருவரும் அமைதியற்ற வகையில் செயற்பட்டுள்ளனர்.
இதன்பின்னர், 36 வயதான பெண்ணும், 30 வயதான ஆணும் கைதானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.