பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளாந்தம் சுமார் 5,000 பேர் வருவதால், கடவுச்சீட்டு விண்ணப்ப மையத்தில் பிரதான பரிசோதகர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று (பெப் 9) கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டமையினால் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட ஆறு பொலிஸார் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.