முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு தேவையான மூன்று ஆணையாளர்களினதும் சிபாரிசு பெறப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சதொச ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.