பணத்தை தொடர்ந்து அச்சடித்தால் நாடு முற்றிலுமாக வீழ்ச்சியடையும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆட்சியாளர்களும் கடன் பெற முடியாத நிலையில் வருடத்துக்கு ஒரு முறை பணத்தை அச்சடித்து வந்தனர் என்றும் கடந்த அரசாங்கங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடன்களை பெற்றன என்றும் தெரிவித்தார்.
கடன்கள் போதாவிடின் அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டதாகவும் தற்போது நாடு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளமை மற்றும் வங்குரோத்தாகிய காரணத்தால் எந்த நாட்டிலும் கடன் பெற முடியாது என்றார்.