பயணிகள் பஸ்களில் ஏறி பணம் பெற்று மோசடி செய்த 19 வயது இளைஞரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, கடலில் நீந்தி தப்பிச் செல்ல முயன்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட அருகில் கடமையில் இருந்த போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடலில் நீந்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்.