அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் ஊடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி உத்தரவொன்றை பிறப்பிகுமாறு கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து, நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை விடுத்தது.