இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அம்புலுவாவ கோபுரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவை டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார்.
இதன் மூலம் இலங்கையின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான அம்புலுவாவ கோபுரம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த காணொளியை இதுவரை 3.4மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. (a)