நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, என சமகி ஜன பலவேகவின் நியமன உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர், வடிவேல் சுரேஷ் இனது தேர்தல் கூட்டத்திற்குச் செல்லாதது அவர் ஒரு பொய்யான தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதாகவும், இவ்வாறான பொய்யான தலைவர்களால் நாட்டை உருவாக்க முடியுமா எனவும் டயானா கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தாய் மண்டியிட்ட போது, எவ்வித நிபந்தனையுமின்றி இலங்கைத் தாய் மீள எழுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தோள் கொடுத்தார் என்றும் டயானா கமகே தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போன்ற ஒருவர் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவர் பதவியேற்கும் போது எதையும் பார்க்கவில்லை. அவரது வீடு பற்றி எரிந்தது. அவர் அன்று இலங்கை தாயைத் தான் பார்த்தார் எனவும் டயானா கமகே தெரிவித்திருந்தார்.